×

#BREAKING புதிய திருப்பம்- பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டுமென தினகரன் ஆளுநருக்கு கடிதம்

 

அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆளுநரிடம் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள் ஆதரவுடன்,தவெகவுக்கான ஆதரவு எண்ணிக்கை 118 ஆக உள்ளது. இதனிடையே விஜய் நாளை முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் பரவிய நிலையில், தமிழ்நாடு ஆளுநர் இன்னும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக ஆதரவு தெரிவித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற காமராஜ் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் டி.டி.வி.தினகரன்.