×

நீண்டகாலம் அரசு தலைமை பதவி வகிப்பவர் என்ற சாதனை படைத்த மோடி- தினகரன் வாழ்த்து

 

இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகிப்பவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் நீண்டகாலம் அரசாங்கத்தின் தலைமை பதவி வகிப்பவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு சிந்தனையை இலக்காகவும், நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதையே கொள்கையாகவும் ,நிர்ணயித்து ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.