துரோக கூட்டத்தை அடியோடு அகற்ற அம்மாவின் நினைவுநாளில் உறுதியேற்போம் - டிடிவி தினகரன்
Dec 5, 2023, 14:10 IST
தீய சக்தியையும், துரோகக் கூட்டத்தையும் அடியோடு அகற்ற அம்மாவின் நினைவுநாளில் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" எனும் தாரக மந்திரத்தை தன் வாழ்க்கையாக கொண்டு நாடு போற்றும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று.