சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்த மகாகவி பாரதியாரை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன்
Dec 11, 2024, 12:30 IST
சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்த மகாகவி பாரதியார் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்ரனர். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.