×

சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகள் - டிடிவி தினகரன்!

 

சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அறத்தையும் அகிம்சையையும் தனது இரு கண்களாக பாவித்த பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, மனிதகுலத்தின் வழிகாட்டியாக திகழ்ந்த பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நாளில், அவர் போதித்த அகிம்சை, சத்தியம், பற்றற்று இருத்தல் போன்ற உயரிய நெறிகளை பின்பற்றி, அன்பின் வழியில் அறநெறி சார்ந்த வாழ்க்கையை வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.