ஆசிய விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற பிரித்விராஜ் - டிடிவி தினகரன் வாழ்த்து
Oct 1, 2023, 14:55 IST
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் ட்ராப் பிரிவில் பிரித்விராஜ் தொண்டைமான் தங்கப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் ஆண்கள் ட்ராப் பிரிவில் கழக அமைப்புச் செயலாளர் திருமதி.சாருபாலா தொண்டைமான் அவர்களின் மகன் திரு.பிரித்விராஜ் தொண்டைமான் தங்கப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.