×

கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு தினகரன், வானதி சீனிவாசன் வாழ்த்து

 

கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு தினகரன், வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைதள பக்கத்தில், செஸ் போட்டியின் உயரிய பட்டமான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் செஸ் வீராங்கனை என்ற சாதனையை படைத்திருக்கும் வைஷாலி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.