×

‘அம்மா உணவகங்களை மூடினால் என்ன?’ பேரவையில் அமைச்சர் பேச்சு- டிடிவி தினகரன் கண்டனம்

 

புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் மீதான அரசியல் வெறுப்புணர்வால், அம்மா உணவகங்களை மூடி அவற்றால் பசியாறும்ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என தி.மு.க. அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், “‘அம்மா உணவகங்களை மூடினால் என்ன?’ என்று சட்டப்பேரவையிலேயே தி.மு.க.வின் மூத்த அமைச்சர் பேசியிருப்பது அக்கட்சியின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. இதன்மூலம், ‘அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் முன்பு கூறியிருந்தது வெறும் வெளிவேஷம் என்பது அம்பலமாகியிருக்கிறது. வழிவழியாக வரும் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளின் தொடர்ச்சிதான் அமைச்சரின் இந்தப் பேச்சு. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீதான அரசியல் வெறுப்புணர்வால், அம்மா உணவகங்களை மூடி அவற்றால் பசியாறும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என தி.மு.க. அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.