×

‘தமிழகம் தாண்டி தேசிய அரசியலிலும் முத்திரை பதித்த காமராஜர்’ – டிடிவி தினகரன்

விருதுநகரில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ல் பிறந்தவர் காமராஜர் . தந்தையின் இறப்பையடுத்து பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவர் துணிக்கடையில் வேலைக்கு சென்றார். அத்துடன் 16 வயதில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு போராடிய இவர் சிறைக்கு சென்றார். 8 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து காங்கிரஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவரானார். 1940 தொடங்கிய அவரது பணி 1954இல் முதலமைச்சர் ஆகும் வரை தொடர்ந்தது. விவசாய நிலங்கள் பாசன வசதி
 

விருதுநகரில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ல் பிறந்தவர் காமராஜர் . தந்தையின் இறப்பையடுத்து பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவர் துணிக்கடையில் வேலைக்கு சென்றார். அத்துடன் 16 வயதில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு போராடிய இவர் சிறைக்கு சென்றார்.

8 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து காங்கிரஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவரானார். 1940 தொடங்கிய அவரது பணி 1954இல் முதலமைச்சர் ஆகும் வரை தொடர்ந்தது. விவசாய நிலங்கள் பாசன வசதி பெற வேண்டும் என்பதற்காக ஆழியாறு-பரம்பிக்குளம், மணிமுத்தாறு, வைகை என அணைக்கட்டுகள் கட்டினார். என்எல்சி, ஐசிஎஃப் போன்றவற்றின் மூலம் தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திட்ட இவர் பள்ளியில் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார். இத்தகைய கல்விக்கண் திறந்த பெருந்தலைவரின் 119 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கண் தந்து அவர்களது தலைமுறைகளை மாற்றிய பெருந்தலைவர் காமராஜரை அவர்களது பிறந்தநாளில் வணங்குகிறேன். தமிழகம் தாண்டி தேசிய அரசியலிலும் முத்திரை பதித்த அன்னாரது நற்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.