×

தமிழக அரசுக்கே தெரியாமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பிய மத்திய அரசு! டிடிவி தினகரன் கண்டனம்

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவே தவித்துவருகிறது. முதல் அலையைக் காட்டிலும் தற்போது கொரோனா அதிக வீரியத்துடன் பரவிவருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு தடுமாறி வருகிறது. தமிழ்நாட்டிலும் படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுபாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ன்னையிலுள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திராவிற்கும் தெலங்கனாவிற்கும் மத்திய அரசு அனுப்பியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக
 

கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவே தவித்துவருகிறது. முதல் அலையைக் காட்டிலும் தற்போது கொரோனா அதிக வீரியத்துடன் பரவிவருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு தடுமாறி வருகிறது. தமிழ்நாட்டிலும் படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுபாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ன்னையிலுள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திராவிற்கும் தெலங்கனாவிற்கும் மத்திய அரசு அனுப்பியது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது. இத்தகைய செயலினை எந்தக் காரணத்திற்காகவும் ஏற்க முடியாது.

தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோல் கொரோனா தடுப்பூசியின் விலையை அவரவர் இஷ்டம்போல நிர்ணயிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.