×

பெரியார் பெயர் அழிப்பு: இந்த வேலையை இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன?- டிடிவி தினகரன்

சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை Grand Western Trunk Road என தமிழக அரசு திடீரென மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக Grand western trunk road என மாற்றி எழுதப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், “சென்னை – பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர்
 

சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பெயரை Grand Western Trunk Road என தமிழக அரசு திடீரென மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில நெடுஞ்சாலை துறை இணையத்திலும் பெரியார் ஈ.வே.ரா நெடுஞ்சாலை என்பதற்கு பதிலாக Grand western trunk road என மாற்றி எழுதப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், “சென்னை – பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயரை நீக்கியிருக்கும் பழனிசாமியின் காபந்து அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் உணர்வோடு விளையாடும் இந்த வேலையை இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன? உடனடியாக இந்த உத்தரவினை திரும்பப் பெற்று ‘ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை’ என்ற பெயரே தொடர்ந்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” நக் குறிப்பிட்டுள்ளார்.