×

‘தற்குறி' விஜய் கழகம்னு வச்சிகலாம்...23ஆம் புலிகேசி ஆட்சி”- டிடிவி தினகரன் விமர்சனம்

 

தவெக அமைச்சர்களுக்கு அடிப்படை புரிதல் கூட இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “சினிமாவில் ஹீரோவாக இருந்ததால் புரட்சித் தலைவர் ஆகிவிட முடியுமா..? 9000-த்தை தொள்ளாயிரம்னு படிக்குறாங்க.. அடிப்படை கணித அறிவு கூட இல்ல.. இவங்க ஆட்சிக்கு மார்க் போட்டா அதை படிக்க தெரியுமா அவங்களுக்கு..? சிரிப்பாக தான் இருக்கிறது. தவெக அமைச்சர்களுக்கு அடிப்படை புரிதல் கூட இல்லை. தவெக என்ற நாசகார சக்தியை ஒழிக்க அனைத்து சக்திகளும் ஒன்றுசேருவோம். இந்த ஆட்சியை எதிர்க்கட்சிகள் முடிவுக்கு கொண்டுவருவோம். சரியான நேரத்தில் சரியானதை செய்வோம். இன்ஸ்டாகிராம் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள், அதே இன்ஸ்டாகிராம் மூலம் வீழ்வார்கள். சபாநாயகர் நடுநிலையோடு செயல்படுவதுபோல அமைச்சர்களை தவறான கருத்தைப் பேச வைக்கிறார். தமிழை கூட சரியாக வாசிக்க தெரியாதவர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எம்.எல்.ஏக்கள் அடிப்படை கணித அறிவுகூட இல்லாமல் பேசுவது வருத்தமளிக்கிறது.விஜய் தலைமையிலான ஆட்சி 23 ஆம் புலிகேசி ஆட்சிபோல உள்ளது. 

தற்குறிகள் என்று சொன்னால் அதற்கு சரியான உதாரணம் இவர்கள்தான். 23ம் புலிகேசி படத்தில் வருபவர்கள் இப்போது வந்து ஆட்சியமைத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இவர்கள் ஆட்சி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் என்பதற்குப் பதிலாக ‘தற்குறி' விஜய் கழகம் என்று வைத்துக்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். எல்லாரும் தற்குறிகளாகத்தானே இருக்கிறார்கள். இவர்களை பற்றி விமர்சிப்பதே நமக்கு அசிங்கமாக இருக்கிறது. ஆனால் இதற்கு ஒரு முடிவு உறுதியாக வரும்.2029-ல் முதல்வர் விஜயை பிரதமர் சீட்டில் ராகுல்காந்தி உட்கார வைப்பார்” என்றார்.