×

“சினிமாவில் விஜய் ஹீரோ.. அரசியலில் வில்லன்”- டிடிவி தினகரன்

 

ஊழல், லஞ்சமே இல்லை என்கிறார்கள் ஆனால் கேரளாவில் உள்ள நகை நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய  அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், “என் டேபிளில் 3 ஃபைல் இருக்கிறது. அதை ஓப்பன் செய்ய வைத்து விடாதீர்கள்' என்று முதல்வர் பேசுவது மிரட்டல்தான். சினிமாவில் முதலமைச்சர் விஜய்யை ஹீரோவாக பார்த்தவர்களுக்கு டிவியில் அவரை பார்க்கும்போது ரகுவரன் ஸ்டைலில் வில்லனாக தெரிகிறார். அவரின் ஒரிஜினல் கேரக்டர் இதுதான் என்று நினைக்கிறேன். அவர் சினிமாவிற்காக பத்ம பூஷனோ, பாரத ரத்னாவோ பெறவில்லை. ஆனால், அரசியல்வாதியாக சிறந்த வில்லன் நடிகராக பாரத ரத்னா வாங்கும் அளவிற்கு நடிக்கிறார்.  செங்கோட்டையன் இவ்வளவு வன்மம் பிடித்த மனிதராக இருப்பார் என நான் நினைத்துப் பார்க்கல.. அடையாளம் காட்டிய கட்சி அழிய வேண்டும் எனப் பேசியது கண்டிக்கத்தகக்து. அனைவரும் பழனிசாமியுடன் இணைந்து பயணித்தால் தான் அதிமுகவை பலப்புடுத்த முடியும். விஜய் அவர்கள் சொல்வதை அவர்கள் கட்சியினரே கேட்பதில்லை.. ஊழல், லஞ்சமே இல்லை என்கிறார்கள் ஆனால் கேரளாவில் உள்ள நகை நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.