×

ஸ்டாலின் எத்தனை பயிலரங்கம் நடத்தினாலும் திமுகவினர் திருந்தமாட்டார்கள்- டிடிவி தினகரன்

 

ஆம்பூர் அருகே அமமுக கட்சியை சேர்ந்த  ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் திமுகவினரால் தாக்கப்பட்டதற்கு அமமுக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜசேகர், அமமுக கட்சியை சார்ந்த இவர், தனது ஊராட்சி குட்பட்ட 4வது வார்டில் உள்ள தெருவில் 200 மீட்டர் தொலைவில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கால்வாய் பணியை அமைக்க அதற்கான ஆய்வு மேற்க்கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகளான  இளங்கேவன், குபேந்திரன்  ஆகியோர் கழிவு நீர் கால்வாய் இப்பகுதியில் அமைக்ககூடாது என  கைலாசகிரி ஊராட்சி மன்ற தலைவர்  ரமணியின் கணவர்  ராஜசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அவரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராஜசேகரன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் திமுக நிர்வாகிகள் மீது உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆம்பூர் அடுத்த கைலாசகிரி ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜசேகர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன், எனவும் கைலாசகிரி ஊராட்சிக்குட்ப்பட்ட பனங்காட்டூரில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய் பணிகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தடுத்து நிறுத்த முயன்றதோடு ஆளும் தி.மு.கவினர் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.



ஸ்டாலின் எத்தனை பயிலரங்கம் நடத்தினாலும் திமுகவினர் திருந்தமாட்டார்கள் என்பதற்கு இச்சம்பவம் உதாரணம், மேலும் உள்ளாட்சி நிர்வாகத்தில் அத்துமீறி, தலையிட்டு ஊராட்சி மன்றதலைவரையும், அவரது கணவரையும், தாக்கிய திமுகவினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.