“எம்.எல்.ஏக்களுக்கு பதவி ஆசை, பொருளாசை காட்டும் ஆளுங்கட்சி”- திடீரென ஆளுநரை சந்தித்த தினகரன்
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகருடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார். குதிரை பேர புகார் தொடர்பாக தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “குதிரை பேர புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். பணம், பதவிக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி மாறுகின்றனர். தூயசக்தியின் முகமூடியை கிழிக்கவே ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். எம்.எல்.ஏக்களுக்கு பதவி ஆசை காட்டி தங்கள் பக்கம் இழுப்பவர்களுக்கு முடிவு கட்ட ஆளுநரிடம் முறையிட்டேன். தூயசக்தியின் முகமூடியை கிழிக்கவே ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். குதிரை பேர அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். பணத்திற்காக, பதவிக்காக வாக்களித்த தொகுதி மக்களுக்கு எதிராக ராஜினாமா செய்கின்றனர். அமமுக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் நடத்தி 100 நாட்கள் ஆகிவிட்டது. 100 நாட்கள் ஆகியும் குதிரை பேர புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.