×

நான் ராஜ்யசபா சீட் கேட்கவில்லை - டிடிவி தினகரன்

 

எத்தனை தொகுதி வேண்டும் என்பதை பாஜகவுடன் பேசி முடிவு செய்வோம், கௌரவமான தொகுதிகளில் போட்டியிடுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்திற்கு தலைமையாக அதிமுக அமைந்துள்ளது. ராஜ்யசபா எம்பி சீட்டும் நான் கேட்கவில்லை என்று பலமுறை கூறிவிட்டேன். வெகு விரைவில் கௌரவமான தொகுதிகளில் போட்டியிடுவோம். தகுதியான வேட்பாளர்களுக்கு சீட்டு பெற்று வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவோம். கொள்கை கூட்டணி, பத்தாண்டுகள் கூட்டணி என்று கூறக்கூடிய திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக எத்தனை பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியும். அதேபோன்று எந்த பிரச்சனைகளும் இல்லாமல் எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு நடைபெற்ற நாங்கள் வெற்றி பெற்று செல்வோம் என்பதில் கவனமாக இருக்கிறோம். நாங்கள் வெற்றியை நோக்கி செல்லக்கூடியவர்கள். நான் எப்படி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற முடிவை எடுத்தேனோ அதேபோல சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்ற அடிப்படையில் பாஜகவின் உடைய வழிகாட்டுதலின்படி எங்கள் கட்சிக்கு எத்தனை சீட்டுகள் வேண்டுமோ அதைக் கேட்டு பெறுவேன்.

விஜய் அரசியலுக்கு வந்ததால் அதிமுக- பாஜக கூட்டணிக்கு தான் பாதிப்பு என்று கூறுகிறார்கள். சும்மா வெளியில் மட்டும் சொல்லிக் கொள்கிறார்கள். எனக்கு தெரியும். இன்னும் சில விஷயங்களை நான் ஓப்பனாக சொல்ல முடியாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மைதீன் ஏற்கனவே மூன்று சீட்டு ஏற்கனவே வழங்கியிருந்தார்கள். ஆனால் அதில் இரண்டு சீட்டு தான் அவர்கள் கொடுப்பார்கள் என்று தெரிந்தவுடன் மயக்கம் அடைந்து விழுந்துவிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மற்றும் சில கட்சிகள் இருப்பது பலம் வாய்ந்த அணியாக தான் இருக்கிறது. மற்றும் எந்தெந்த கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வர வேண்டும் என்ற கருத்தை அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். திமுக கூட்டணியை நம்பி தான் ஒவ்வொரு தேர்தலிலும் இருக்கிறார்கள். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆசியோடு திமுக வெற்றி பெற வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனை பேச வைத்து அதை பதிவு செய்தது எந்த ஒரு உண்மையான அம்மாவின் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அது எங்களுக்கு வலியை கொடுத்திருக்கிறது” என்று கூறினார்.