×

"மனோஜ் பாண்டியன் திமுகவுக்கு போனது ரொம்ப வருத்தம்” - டிடிவி தினகரன்

 

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களில் ஒருவரான மனோஜ் பாண்டியன், இன்று  தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பின் நெல்லை ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பதவியையும் மனோஜ் பாண்டியன் ராஜினாமா செய்தார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “மனோஜ் பாண்டியன் யோசித்து செயல்படக் கூடியவர். அவர் திமுகவில் இணைந்தது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தொண்டர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுப்பது மிகவும் துரதிஷ்டமானது. தற்போது இருப்பது அதிமுகவே இல்லை. தற்போது உள்ளது எடப்பாடி திமுக தான். இதுபோன்று பேசினால் வீடியோ வெளியிடும் உதயகுமார் போன்றவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். உண்மையான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தொண்டர்கள் எங்கு இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் என எண்ணுவார்கள்” என்றார்.