×

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம்: டிடிவி தினகரன்  

 

மதுரையில் இன்று அமமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை கிழக்கு தொகுதியைச் சேர்ந்த செயல்வீரர்களுடன் கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “திமுக ஆட்சியை அகற்ற அதிமுகவினர் ஓரணியில் இணைய வேண்டும். பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு அனைத்து முக்கியத்துவமும் தரப்படுகிறது அதிமுக மீட்பு என்ற பின்புலத்தில் சசிகலா செயல்படுகிறார். தேர்தல் நேரத்தில் சசிகலாவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக தொடரும். தீயசக்தி திமுகவை வீழ்த்த, அனைத்து கட்சிகளும் ஒரே கூட்டணியில் பயணிக்க வேண்டியது அவசியம்.

அதிமுக கூட்டணிக்கு நாங்கள் செல்லவில்லை. எங்கள் கூட்டணிக்குதான் இபிஎஸ் வந்திருக்கிறார். எங்கள் பங்காளி சண்டையை ஓரம் வைத்துவிட்டு, திமுகவை வீழ்த்திய பிறகு பார்த்துக்கொள்ளலாம். பாமகவில் அப்பா, மகனுக்குள் பிரச்சினை முடிந்து, பழைய பலத்தோடு எங்கள் கூட்டணிக்கு வருவர். கூட்டணி கட்சி மாத்திரமல்ல, புதிய கட்சிகளும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றார்.