×

இந்தியா மீது அமெரிக்கா 25% வரி- ட்ரம்ப் அதிரடி

 

இந்தியாவுக்கான 25% வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்துர் பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நேற்று உரையாற்றிய நிலையில் உரையாற்றிய நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காரணமல்ல என நேரடியாக அவரது பெயரை சுட்டிக்காட்டாமல் பேசி இருந்தார்

இந்நிலையில் வரும் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவுக்கு 25 சதவிகித வரிவிதிப்பை அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். 25% வரி மற்றும் அதற்கான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உடனான இந்தியாவின் பொருளாதார உறவை சுட்டிக்காட்டி, அதற்கு அபராதமாக 25% வரி விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.