×

பாதாள சாக்கடை குழியில் சிக்கிய லாரி… ​அரைகுறையாக மூடப்பட்ட பள்ளத்தால் விபரீதம்..!

 

கோவை, வெள்ளக்கிணறு முக்கியச் சாலையில் கடந்த சில நாட்களாகப் பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. பணிகள் தற்காலிகமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தோண்டப்பட்ட பள்ளங்களை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய முறையில் தார் மற்றும் ஜல்லிக்கற்களைக் கொண்டு மூடாமல், வெறும் மண்ணை மட்டும் கொட்டி அரைகுறையாக அப்படியே போட்டுச் சென்றுள்ளனர்.​

இந்நிலையில், அந்தச் சாலை வழியாக அதிக எடையுடன் வந்த கனரக லாரி ஒன்று, அதை கடக்க முயன்ற போது, மண்ணுக்குள் சக்கரம் இறங்கி அப்படியே ‘லாக்’ ஆகியுள்ளது. லாரியின் பின் சக்கரங்கள் பாதாள சாக்கடைக் குழிக்குள் தடாலடியாக இறங்கி, வண்டி ஒருபுறமாகச் சாய்ந்தது.

பருவமழை காலம் நெருங்கி வரும் வேளையில், மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய செயலை செய்யாமல், பாதாள சாக்கடைப் பள்ளங்களை சீராக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் பெரிய விபத்துகள் நேரிடும் எனப் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.