அஜித்தின் கார் ரேசை பார்க்க உள்ள த்ரிஷா?
அஜித் குமாரின் கார் பந்தய பயிற்சியை காண சில்வர்ஸ்டோனில் நடிகை ராதிகா இருப்பது போல் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ராதிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் த்ரிஷாவுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடைபெற்று வரும் நடிகர் அஜித் குமாரின் கார் பந்தயப் பயிற்சியைக் காண நடிகை ராதிகா சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷாவுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால், நாளை நடைபெற உள்ள அஜித் குமாரின் கார் பந்தயத்தை நடிகை த்ரிஷாவும் நேரில் கண்டு களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் ‘MICHELIN LE MANS CUP கார் பந்தயம் லண்டனில் நடைபெறும் நிலையில், வரும் 10 முதல் 16-ம் தேதி வரை லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய், அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்வையிட உள்ளார். சில்வர்ஸ்டோனில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் அஜித்தின் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் நேரில் கண்டு ரசிக்கவுள்ளார்.