திருப்பதியில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம்
May 4, 2026, 07:47 IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகை திரிஷா கிருஷ்ணன்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை திரிஷா கிருஷ்ணன் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சாமி தரிசனம் செய்து வைத்து ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்தப்பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். கோயிலுக்கு வெளியே வந்த நடிகை திரிஷா கிருஷ்ணனை கண்ட பக்தர்கள் அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர்.