து. ஜனாதிபதி வேட்பாளராக திருச்சி சிவா?
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுனருமான சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். NDA சார்பில் தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், INDIA கூட்டணி சார்பில் திருச்சி சிவாவை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
என்.டி.ஏ சார்பிலான குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழர் ஒருவர் அறிவிக்கப்பட்ட நிலையில், இண்டி கூட்டணி தரப்பிலும் தமிழர் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க திமுக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் பிற கட்சிகள் வெவ்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன.