தொழில்நுட்பக்கோளாறு- திருச்சியில் வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்
திருச்சியிலிருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் வானில் வட்டமிட்டமிட்டது. பின்னர் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
திருச்சியிலிருந்து துபாய்க்கு இன்று மதியம் 2 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. 152 பயணிகள் உள்பட 160 பேருடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. உடனடியாக திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி அனுமதி கோரினார். அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து எரிபொருளை குறைக்கும் வகையில் அந்த விமானம் சிறிது நேரம் ஸ்மாலில் பட்டம் விட்டது சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு விமானம் பத்திரமாக தரையிரக்கப்பட்டது. நான் இப்படியும் சாகப் போறேன் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமான மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடந்தாண்டு அக்டோபர் மாதம் சார்ஜாவிற்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் வானில் வட்டமிட்ட அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் எக்ஸ்பிரஸ் விமானத்தில் இன்று நடந்த சம்பவம் விமான பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.