"மக்கள் திலகத்திற்கு செங்கோட்டையன் மலரஞ்சலி!" - எம்.ஜி.ஆர் 38-வது நினைவு நாளில் உருக்கமான மரியாதை.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், ‘புரட்சித் தலைவர்’ என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் அவருக்குத் தங்களது மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மரியாதை செலுத்த உள்ள நிலையில், அரசியல் களம் களைகட்டியுள்ளது.
இந்நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது அவரது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக-வின் மூத்த நிர்வாகியாக நீண்ட காலம் பணியாற்றி, தற்போது தவெக-வில் இணைந்துள்ள செங்கோட்டையன், தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆருக்குத் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.