டெண்டர்களால் கோடிக்கணக்கில் போக்குவரத்து துறைக்கு இழப்பு- ஸ்மார்ட்டாக யோசித்த தவெக அரசு
போக்குவரத்து துறையில் 5 டெண்டர்களை ரத்து செய்து தவெக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் சிக்கி தவிக்கிறது. எனவே இந்தத் துறையில் தேவையற்ற செலவுகளை குறைக்க அரசு உத்தரவிட்டது. மேலும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தும் வகையில் முந்தைய திமுக அரசால் கோரப்பட்ட 5 ஒப்பந்தங்களை போக்குவரத்து துறை ரத்து செய்தது. 1. VLT சாதனங்கள் மற்றும் அவசரக்காலப் பொத்தான்கள் (Panic buttons) 2. வேகக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் 3. சிற்றுந்துகளுக்கான புதிய பேருந்து கூண்டு (Bus body) அமைத்தல் 4. BS VI ரக சிற்றுந்து சேஸிஸ் (Chassis) கொள்முதல் 5. டயர், டியூப் மற்றும் ஃப்ளாப் (Flap) விநியோகம் ஆகிய டெண்டர்களை ்்தவெக அரசு ரத்து செய்துள்ளது.
விரைவில் போக்குவரத்து துறை சார்பில் மறு டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுத்து குறைந்தபட்ச வெளியில் ஒப்பந்தம் கூறும் நிறுவனங்களிடம் பொருட்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.