×

டிக்கெட்டுகளை எரித்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்! கண்டுகொள்ளாத அரசு

 

திருநெல்வேலி மண்டல போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரிக்கு முன்பு டிக்கெட் மோசடியில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இந்த போக்குவரத்து கழகத்தில் உயர் அதிகாரிகள், பேருந்து நடத்துனர்களை (Conductors) பல செட் டிக்கெட்டுகளை வழங்குமாறு கட்டாயப்படுத்தி இந்த மோசடியை அரங்கேற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

பேருந்துகள் இயங்குவதற்கான செயல்பாட்டுச் செலவுகள் (Operational Costs) மற்றும் டிக்கெட் வருவாயைப் போலி கணக்குகள் மூலம் காட்டி, அரசுப் பொதுப் பணம் பெருமளவில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காத நிலையிலும், அவற்றிற்குப் டிக்கெட் புத்தகங்கள் மற்றும் எண்கள் தயார் செய்யப்பட்டு, அரசுப் பணம் மற்றும் டீசல் நிதிகள் முறைகேடாகச் சுருட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த 2024 பிப்ரவரி 28ம் தேதி  மின்னணு இயந்திரம்  மூலம் டிக்கெட் வழங்குவது செயல்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்பாக இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்து விடக்கூடாது என்கிற பயத்தில் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நெல்லை போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் இருந்து இரண்டு லாரிகளில் டிக்கெட் பண்டல்கள் ஏற்றிக்கொண்டு பாபநாசம் பணிமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

குறிப்பிட்ட சில அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அந்த டிக்கெட்டுகள் முழுவதும் எரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது.  இந்த முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் விசாரணைக்கு பயந்து மோசடியை மூடி மறைக்கும் வேளையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் வருகின்றனர். தவெக அரசு இந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.