×

மது போதையில் திருநங்கைகள் அட்டகாசம்! மளிகை கடை, சாலையோர கடைகளை அடித்து நொறுக்கினர்

 

கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலைகளில் திருநங்கைகள் அத்துமீறி நுழைந்து மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இரும்பு உருக்காலை, தனியார் அனல் மின் நிலையம், டயர் உற்பத்தி, பழைய பொருட்கள் சேகரிப்பு என பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த சில நாட்களாக கும்மிடிப்பூண்டி தொழிற்சாலைகளில் திருநங்கைகள் அத்துமீறி நுழைந்து பணம் கேட்டு மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டோக்களில் கும்பலாக செல்லும் திருநங்கைகள் தொழிற்சாலை காவலாளியிடம் தகராறு செய்து அநாகரிக செயலில் ஈடுபட்டு தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைகின்றனர். தொழிற்சாலையின் அலுவலக அறைக்கு செல்லும் திருநங்கைகள் அங்கு அட்டகாசம் செய்து அங்குள்ள ஊழியர்களிடம் பணம் கேட்டு ஆபாசமாக பேசி தகராறு செய்கின்றனர். 


தொடர்ந்து அலுவலக ஊழியர்கள் பணம் கொடுக்க கொண்டு வந்த போதிலும் திருநங்கைகள் கேட்கும் பணத்தை கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர். தொடர்ச்சியாக தொழிற்சாலைகளுக்கு ஆட்டோக்களில் வந்து திருநங்கைகள் பணம் கேட்டு அச்சுறுத்தும் சம்பவம் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தனியார் தொழிற்சாலை மேலாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலைகளுக்குள் புகுந்து ரவுடிகள், அரசியல்வாதிகள் மாமூல் கேட்கும் வரிசையில் தற்போது திருநங்கைகளும் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.