×

#BREAKING ரயில் டிக்கெட் கட்டணங்கள் சொற்ப அளவில் உயர்வு

 

நாடு முழுவதும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் டிசம்பர் 26ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கும் குறைவான தூரம் பயணித்தால் எந்தவித கட்டண உயர்வும் இல்லை. 215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு சாதாரண வகுப்பில் ஒரு கி.மீ.க்கு ஒரு பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெயில், விரைவு ரயில்களில் 215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

6,500 கிலோ மீட்டர் வரையிலான ரயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டண உயர்வின் மூலம் இந்தாண்டில் கூடுதலாக ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும். 215 கி.மீ வரை பயணிப்போருக்கு கட்டண உயர்வு இல்லை. புறநகர் மின்சார ரயில்களில் கட்டண உயர்வு இல்லை. சீசன் டிக்கெட் எடுப்போருக்கும் உயர்வு இல்லை.