×

ரூ.5.78 கோடி ஓடும் ரயில் கொள்ளையர்களை கூண்டோடு தூக்கிய அதிகாரிக்கு கிடைத்த டாப் பொறுப்பு!

 

தமிழகத்தின் புதிய டிஜிபியாக யாரை நியமனம் செய்யலாம் என்பது தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி ஆலோசனை நடத்தியது.இந்த ஆலோசனையில், தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் முடிவில், டிஜிபிக்களாக ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகிய 3 பேர் கொண்ட பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது எல்லைப் பாதுபாப்பு படை டிஜிபியாக பணியாற்றி வருகிறார். மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். தமது 22வது வயதில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கினார்.

தமிழகத்தில் தேனி, தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றியவர். பின்னர், 2001ம் ஆண்டு சென்னை பூக்கடை துணை கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனர், சிபிசிஐடி ஐஜி, மதுரை கமிஷனர், சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர், தமிழக காவல்துறை ஆயுதப்படை டிஜிபி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியவர்.

குறிப்பாக, சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இவர் தலைமையிலான சிபிசிஐடி கொள்ளையர்களை கைது செய்தது. சென்னை சென்ட்ரல் ரயில் ஸ்டேஷன் குண்டுவெடிப்பு, சென்னையில் பெண் என்ஜினியர் உமா மகேஸ்வரி கொலை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியவர். கொரோனா கால கட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக திறம்பட களத்தில் செயல்பட்டவர் இவர் தான்..