ரயில் பயணிகளே உஷார்! இந்தத் தப்பைப் பண்ணினா நேரா ஜெயில் தான்... தெற்கு ரயில்வேயின் அதிரடி உத்தரவு!
தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் அளித்த பேட்டி:
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிக்கும்போது, பயணியர் சிலர் தங்கள் மொபைல் போனில், 'ஹெட்போன்' பயன்படுத்தாமல், அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது, 'ரீல்ஸ்' மற்றும் வீடியோ பார்ப்பது, 'கேம்' விளையாடுவது, போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது, சக பயணியருக்கு தொந்தரவை ஏற்படுத்துகிறது. இது குறித்து, பயணியர் பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஜன விஷ்வாஸ் சட்டம், திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு தொந்தரவு தரும் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன்படி, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில், மொபைல்போனில் 'ஹெட்போன்' பயன்படுத்தாமல், அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது, வீடியோக்களை பார்ப்பது போன்ற செயல்களால் சக பயணியருக்கு தொல்லை கொடுத்தால், இனி 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டு தண்டனையும் சேர்த்து விதிக்கப்படும் என, தெற்கு ரயில்வே, அனைத்து கோட்டங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அபராதத்தை, டிக்கெட் பரிசோதகர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரம் கொண்ட வணிகப்பிரிவு அலுவலர்கள் வசூலிக்கலாம்.
எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தொந்தரவு அளித்தால், 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.