×

ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த பயணி கீழே விழுந்து பலி- பதறவைக்கும் சிசிடிவி

 

ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த பயணி கீழே விழுந்து பலி- பதறவைக்கும் சிசிடிவி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன், வைகை விரைவு ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தபோது சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் கால் மோதியதில் கீழே விழுந்து, அதே ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(24). சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவில்லா பெட்டி படிக்கட்டில் அமர்ந்தபடி நேற்று பயணம் செய்துள்ளார். அப்போது, அந்த ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த சமயம் கால் நடைமேடையில் மோதி இடறி கீழே விழுந்துள்ளார். இதனால், வேகமாக சென்ற ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.