சுற்றுலா சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்! கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!
Jul 18, 2026, 11:12 IST
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி செங்கப்பள்ளி அருகே சுற்றுலா சென்று விட்டு திரும்பிய கார், திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, பழுதாகி நின்ற கேஸ் டேங்கர் லாரியின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது.
அதில், தம்பதி உட்பட, மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர். குழந்தை உட்பட, ஐந்து பேர் காயமடைந்தனர். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் இதே ஊத்துக்குளியில் கார் விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஆறு பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.