×

கோயிலுக்கு வந்த‌போது சோகம்- லாரி மீது ஆட்டோ மோதியதில் 3 பேர் பலி

 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சாலையில் சென்ற ஆட்டோ, முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.


சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு பெரியபாளையம் கோவிலுக்கு சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது. கொடுங்கையூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் (42), அவரது மனைவி (39), மகள் தனலட்சுமி (10) மாமியார் (64), மைத்துனர் மகன்கள் கோகுல் (10), பிரசாந்த் (15) ஆகியோர் ஒரே ஆட்டோவில் பெரியபாளையம் கோயிலுக்கு சாமிதரிசனம் செய்ய சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பினர். அப்போது லோகநாதன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். பனபாக்கம் அருகே உள்ள மாநகர பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் சென்ற லாரி மீது ஆட்டோ மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பூங்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் படுகாயமடைந்த 5பேரையும் மீட்டு அருகில் உள்ள பெரியபாளையம் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாமியார் ராதா மற்றும் மைத்துனர் மகன் கோகுல் ஆகியோர் பலியாகினர். படுகாயமடைந்த 3 பேருக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான 3 பேரின் சடலங்களை கைப்பற்றி பெரியபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.