நண்பனை சந்திக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்:சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 6 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்..!!
டில்லியின் சுவரூப் நகர் பகுதியில் உள்ள குஷக் சாலை அருகே ஒரு வெட்டவெளியில், கடந்த செப்டம்பர் 13ம் தேதி அழுகிய நிலையில் 16வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 10ம் தேதி, தனக்கு தெரிந்த 17 வயது சிறுவனைச் சந்திக்க அச்சிறுமி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ஒரு டெம்போ வாகனத்திற்குள் வைத்து சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் 6 முறை கத்தியால் குத்திக் கொலை செய்து சடலத்தை புதருக்குள் வீசியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 19 வயதான சிவம் என்ற வாலிபர் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை டில்லி போீசார் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான டெம்போ வாகனத்தை போலீசார் கண்டறிந்தனர்.
இதன் மூலம் குற்றவாளிகள் 4 பேரும் 72 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கு பயன்படுத்திய கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டில்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.