பாட்டி ஊர் திருவிழாவிற்கு வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்! 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம்..!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி ஊரில் நடந்த திருவிழாவை காண கடந்த 30ஆம் தேதி சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த சந்தோஷ் (வயது 24) என்ற இளைஞர், சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்த அடைக்கத்தேவன் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (20) மற்றும் அவரது நண்பர்களான 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் என மொத்தம் 4 பேர் சேர்ந்து சந்தோஷை அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர்.
பின்னர் அரவிந்த் மற்றும் 3 சிறுவர்கள் அந்த சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டி அனுப்பினராம்.
வீட்டிற்கு வந்த சிறுமியும் யாரிடமும் இதுபற்றி கூறாமல் இருந்துள்ளார். ஆனால், ஒருகட்டத்தில் துணிச்சலாக செதுபாவாசத்திரம் காவல்நிலையத்திற்கு வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த இச்சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இதன்பேரில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ், அரவிந்த் மற்றும் 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.