காலையில் அரங்கேறிய சோகம் : ஓசூர் அருகே கோர விபத்து... ஓட்டுப்போட வந்த 3 பேர் பலி..!
Apr 22, 2026, 12:01 IST
ஓசூர் அருகே, பெங்களூரில் இருந்து பொன்னகரம் நோக்கி வந்த காரும், உளுந்தூர்பேட்டையில் இருந்து பெங்களூர் சென்றுகொண்டிருந்த ஆம்னி பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த தர்மபுரி மாவட்டம் சிகரள அள்ளி கிராமத்தை சேர்ந்த வீரமணி, பிரதாப் மற்றும் மாரி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்
இவர்கள் நாளை ஓட்டு போடுவதற்காக காரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் சதீஷ்குமார் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது.