காலையிலேயே அரங்கேறிய சோகம்..!! மத்திய பிரதேசத்தில் வீட்டில் தீ பற்றியதில் 7 பேர் பலி..!!
இந்தூரில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று (மார்ச் 18) அதிகாலை திடீரென தீ பற்றியது. பிறகு குடியிருப்பு முழுவதும் தீ மள மளவென பரவியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரை ந்தனர். இதைத் தொடர்ந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ பற்றியதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து போலீசார் கூறியதாவது: தீ பற்றிய வீட்டிலிருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.தீ பற்றி அடுக்குமாடி குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ மேலும் தீவிரமடைந்தது. இதுவே பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது