×

கோவையில் பெரும் சோகம்! காட்டு யானைக்கு நேர்ந்த விபரீதம் - கண்ணீர் விடும் மக்கள்!

 

கோவை தடாகம் பள்ளத்தாக்கில் ஆனைகட்டி. கேரளா வனப்பகுதியை இணைக்கும் இந்த பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. யானை, புலி, சிறுத்தை மற்றும் காட்டு மாடுகள் என பல வகையான உயிரினங்கள் இந்த பகுதியில் வசிக்கின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து வருகின்றன. இவ்வாறு ஊருக்குள் புகும் யானைகளால் விவசாய பயிர்கள் சேதமாவதாக தொடர்ந்து விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், மதுக்கரை வனச்சரகம் கரடிமடை பகுதியில் நடராஜன் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று இரவு உணவு மற்றும் தண்ணீர் தேடி ஆண் காட்டு யானை ஒன்று நுழைந்துள்ளது. அப்போது அங்கிருந்த மாந்தோப்பில் புகுந்து யானை, அங்கு அமைந்திருந்த மின் மாற்றியை தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

இதுகுறித்து ரோந்து பணியில் இருந்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.