×

வாணவெடிக்கையின்போது நேர்ந்த சோகம்! இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

 

திருவிழாவின்போது மேலே வீசப்பட்ட வாண வெடி மீண்டும் கீழே விழுந்ததால் இரண்டரை வயதுகுழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

திருச்சி மாவட்டம் திருப்பஞ்சீலி நல்லாயி அம்மன் கோயில் 48-வது நாள் மண்டல பூஜை இன்று நடைபெற்றது. மண்டல பூஜைக்காக முக்கொம்பு காவிரி ஆற்றிற்கு சென்ற கிராம மக்கள், அங்கிருந்து புனித நீர் எடுத்து வந்தனர். அப்போது மேலே வீசப்பட்ட வாணவெடி வெடிக்காமல் கீழ்நோக்கி வந்து மனோகரி என்பவர் மீது விழுந்து வெடித்தது. இதில் மனோகரிக்கு தோள் பட்டையிலும், அவர் இடுப்பில் வைத்திருந்த இரண்டரை வயது குழந்தை ஹனிக்காவின் கழுத்து பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே இருவரையும் அருகிலிருந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே குழந்தை ஹனிக்கா பரிதாபமாக உயிரிழந்தார்.