×

பள்ளிக்கு வந்த மாணவர்கள் மின்வெட்டால் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட சோகம்!

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளையார் பாளையம் பகுதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படுவதால், அப்பகுதியில் இயங்கிவரும் காஞ்சி குளோபல் மெட்ரில் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை மாணவ மாணவிகள் பள்ளிக்கூடம் வந்ததற்கு பிறகும் மின்சாரம் வராமல் இருந்ததால் பள்ளிக்க திடீரென விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தொலைதூரங்களிலிருந்து வந்த மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “எந்த கட்சியினராக இருந்தாலும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த கூடாது. அதையும் மீறி கட்சி நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்த சுழலிலும் தேவையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது. மின்வெட்டால் காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி விடுமுறை அளித்ததா என விசாரணை மேற்கொள்ளப்படும்.  பள்ளிகளில் முதலமைச்சர் பிறந்தநாள் நிகழ்ச்சி குறித்து உயர்நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதற்கு, அரசு சட்டபூர்வமாக பதில் அளிக்கும்” என்றார்.