×

இது என்னடா ட்ராபிக் போலீசுக்கு வந்த சோதனை... ரூ.450 கோடி அபராதத்தை வசூலிக்க முடியாமல் திணறல்

 

சென்னையில் கடந்த 5 வருடமாக ரூ.450 கோடி போக்குவரத்து அபராதம் நிலுவையில் உள்ளது.

சென்னையில் கடந்த 5 வருடமாக ரூ.450 கோடி போக்குவரத்து அபராதங்கள் வசூலிக்கப்படாமல் நிலுவை உள்ளன. ஆனால் அபராதங்கள் செலுத்தாவிட்டால் பிரச்சினை இல்லை என வாகன ஓட்டிகள் கருதுகின்றன. 12 கால் சென்டர்கள் அமைத்து அபராதங்களை செலுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கிவருகின்றனர். ஆயிரம் வழக்கில் 90 சதவீதமான வழக்கில் அபராதங்கள் செலுத்தப்படாத நிலை உள்ளதாக போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

அபராதங்களை வசூல் செய்வதில் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு அதிகாரம் இல்லாத வகையில் இருக்கும் மோட்டார் வாகன சட்டத்தால் அபராதங்களை வசூல் செய்ய முடியாமல் போலீசார் திணறிவருகின்றனர். 304 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மூலம் தானாக போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து விதிக்கப்படும் அபராதங்களை வாகன ஓட்டிகள் முறையாக கட்டுவதில்லை.