மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..!!
தீபாவளி பண்டிகை வருகிற 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையிலும், மதுரை மாநகரில் இடையூறின்றி போக்குவரத்தை ஏற்படுத்த இன்று முதல் 8-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று பகல் நேரத்தில் மதுரை நகருக்குள் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, நான்கு மாசி வீதிகள் மற்றும் நான்கு ஆவணி மூல வீதிகளில் இலகு ரக சரக்கு வாகனங்கள் உள்பட எந்த ஒரு சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
பைபாஸ் சாலை, காமராஜர் சாலை, அண்ணாநகர் 80 அடி ரோடு, கே.கே. நகர் 80 அடிரோடு, அழகர்கோவில் சாலையில் மூன்றுமாவடி சந்திப்பு. புதுநத்தம் ரோடு அய்யர்பங்களா சந்திப்பு, திண்டுக்கல் ரோடு கூடல்நகர் சந்திப்பு, அவனியாபுரம் பெரியார் சிலை சந்திப்பு, சிவகங்கை சாலை ரிங்ரோடு சந்திப்பு, மீனாட்சி மருத்துவமனை சந்திப்பு ஆகிய சந்திப்புகளிலிருந்து நகருக்குள் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் (பயணிகள் வாகனங்கள் தவிர்த்து) வந்து செல்ல அனுமதி இல்லை.
இந்த சந்திப்புகள் வழியாக இரவு 11 மணிமுதல் மறுநாள் (6-ந் தேதி) காலை 6 மணி வரை மட்டுமே வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படும். 6 மற்றும் 7-ந் தேதிகளில் பகல் மற்றும் இரவு முழுவதும் மதுரை நகருக்குள் இந்த சாலைகளில் லாரிகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
6, 7-ந்தேதிகளில் பொதுமக்களின் நலன் கருதி நேதாஜி ரோடு, மேலமாசிவீதி, தெற்குமாசிவீதி, கீழமாசிவீதி, மேல ஆவணி மூல வீதி, கீழ ஆவணி மூல வீதி, தெற்காவணி மூல வீதிகளில் இருசக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. பேலஸ் ரோடு, கீழமாரட் வீதிகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
8-ந்தேதி வரை இந்த சாலை வழியாக வரும் நான்கு சக்கர வாகனங்களை, பாதசாரிகள் அதிகமாக வந்து செல் லும் பகுதிகளான தெற்கு மாசிவீதி, நேதாஜி ரோடு, மேல கோபுரத்தெரு, கீழமாராட் வீதி, கீழஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூல வீதி போன்ற வீதிகளில் பொதுமக்களின் நலன் கருதி இன்றுமுதல் 8-ந்தேதி வரை நான்கு தினங்களுக்கு மட்டும் வாகனங்கள் நிறுத்தம் செய்ய முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி கட்டண வாகன நிறுத்தம் மற்றும் வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள அடுக்குமாடி கட்டண வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.
வாகன நிறுத்தம்
விரகனூர் பகுதி, காமராஜர் சாலையிலிருந்து வரும் பொதுமக் கள் தங்கள் வாகனங்களை சவுராஷ்ட்ரா மேல்நிலை பள்ளியிலும், கீழவெளிவீதி, தெற்குமாரட்வீதி, தெற்குவெளி வீதியிலிருந்து வரும் வாகனங்கள் சிந்தாமணி ரோடு தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் வாகனங்களை நிறுத்தம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பைபாஸ் ரோடு, கென்னட் ரோடு மற்றும் எல்லீஸ் நகர் பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் 70 அடி ரோட்டில் உள்ள எல்லீஸ்நகர் வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் மதுரை கல்லூரி மைதானத்திலும், காளவாசல், மேலவெளி வீதியிலிருந்து வரும் பொதுமக்கள் ரெயில்வே வாகன காப்பகம் மற்றும் சேதுபதி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்தலாம்.
நத்தம் சாலை மற்றும் அழகர்கோவில் சாலையிலிருந்து கோகலே ரோட்டில் உள்ள வணிக வளாகங்களுக்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை புது நத்தம் சாலையில் உள்ள பள்ளி மைதானத்திலும், பொதுமக்களின் அனைத்து இருசக்கர வாகனங்களும் கீழமாசி வீதி லெமன் மார்க்கெட் சந்திப்பு முதல் தேரடி சந்திப்பு வரை, தெற்குமாசி வீதி - மஞ் சனக்காரத்தெரு சந்திப்பு முதல் மறவர் சாவடி வரை, தெற்கு மாசி வீதி -மறவர் சாவடி முதல் டி.எம்.கோர்ட் சந்திப்பு வரை, டி.எம். கோர்ட் சந்திப்பு முதல் முருகன் கோவில் சந்திப்பு வரை, முருகன் கோவில் சந்திப்பு முதல் வடக்குமாசி வீதி மேலமாசிவீதி சந்திப்பு வரை, வடக்குமாசி வீதி மேலமாசிவீதி சந்திப்பு முதல் தளவாய் தெரு சந்திப்பு வரை நிறுத்தலாம்.
கியூ.ஆர்.கோடு
இது போல் வடக்கு வெளி வீதி, மேலவெளி, டி.பி.கே.ரோடு, கிரைம்பிராஞ்ச், தெற்கு வெளி வீதி, தெற்குவாசல் பகுதிகளில் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
மேலும், வாகனங்களை நிறுத்த கியூ.ஆர். கோடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகன நிறுத்துமிடங்களை இணைக்கும் வகையில், அதற்கென்று நகர பஸ்கள் அடிக்கடி வெளி வீதிகளில் பயணம் செய்யும் வகையில் சுற்றி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.