×

சென்னைவாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு! அடையாறு காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்

 

போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை கிண்டி காந்தி மண்டபம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிண்டி காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மேற்கொண்டு வருகிறது தற்போது கிண்டி காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியாக ராஜ் பவனில் இருந்து சர்தார் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் காந்தி மண்டபம் மேம்பாலத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். காந்தி மண்டபம் சர்வீஸ் சாலையில் நுழையும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பில் கட்டாயமாக இடதுபுறம் திரும்ப வேண்டும் மேலும் அந்த வாகனங்கள் நேராக மத்திய கைலாஷ் வழியாக செல்ல அனுமதிக்கப்படாது.


இந்த மாற்றுப்பாதைகளை ஏற்படுத்த சி எல் ஆர் ஐ பேருந்து நிறுத்தம் ஏற்கனவே உள்ள இடத்திலிருந்து அடையாறு நோக்கி சற்று முன்னோக்கி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து   மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.