×

சபரிமலையில் இன்று முதல் கேரள பாரம்பரிய சத்திய அறுசுவை உணவு அன்னதானம்

 

சபரிமலை சன்னிதானத்தில் இன்று முதல் ஐயப்ப பக்தர்களுக்கு கேரள மாநிலத்தின் பாரம்பரிய உணவான சத்யா பரிமாறப்பட்டது.

கேரள மாநிலம் சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினந்தோறும்  தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் வரை பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை வந்து சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். இதுவரை சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு வடமாநில உணவான புலாவ் அன்னதானமாக மதிய நேரங்களில் வழங்கப்பட்டு வந்தது.

பெரும்பாலும் சபரிமலை வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் தென்னிந்தியாவிலிருந்து வரக்கூடிய காரணத்தினால் இவர்களுக்கு புலாவ் போன்ற உணவுகள் சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் தற்போது சபரிமலையில் இந்த ஆண்டு முதல் மதியம் கேரளாவின் பாரம்பரிய உணவான சத்யா சாம்பார், பொரியல், அப்பளம், பாயாசம் உள்ளிட்ட அறுசுவை உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று முதல் சபரிமலை சன்னிதானத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஐயப்ப பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை சன்னிதானத்தில் செயல் அலுவலர் பிஜூ துவக்கி வைத்தார். இதற்கு ஐயப்ப பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.