திமுகவில் சீட் தராததால் கட்சியிலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிடும் TR சண்முகசுந்தரம்
Apr 5, 2026, 08:10 IST
மேட்டுப்பாளையத்தில் சுயேட்சையாக டி.ஆர். சண்முகசுந்தரம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்தவர் டி.ஆர். சண்முகசுந்தரம், இவர் நேற்று காலை திமுக தலைமைக்கு அவசர அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு பணிசுமைகள் காரணமாக பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.
சற்றுநேரத்திலேயே மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக டி.ஆர். சண்முகசுந்தரம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக திமுகவில் இருந்து விலகிய அவர், தற்போது சுயேட்சையாக இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளதுடன், அந்தத் தொகுதியில் போட்டி நிலைமைக்கு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.