×

#Breaking அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல்

 

அண்ணாமலை மீது திமுக பொருளாளர்  டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டு குற்றசாட்டுகளை முன் வைத்தார். இதில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் , அமைச்சர்கள் என  பலரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.  இந்த சூழலில்  திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் எந்த ஆதாரமும் இன்றி அவதூறு தவறுகளை வெளியிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு,  சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு 8வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு,  பாஜக தலைவர் அண்ணாமலை என்னை பற்றி தகவல் வெளியிட்டதுக்கு 48 மணி நேரம் கெடு கொடுத்து நோட்டீஸ் வழங்கினோம். பதில் இல்லை. எனவே சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முதலில் கிரிமினல் வழக்கும்,  அதைத் தொடர்ந்து சிவில் வழக்கும் தொடுக்க உள்ளேன். தன் மீது வெளியிட்ட அவதூறு செய்தியில் 21 நிறுவனங்களில் குறிப்பிட்டுள்ளனர்.  மூன்று நிறுவனங்களில் மட்டும் முன்பு வாங்கிய ஷேர்கள் உள்ளது. எதிலும் தலைமை பொறுப்பில் தான் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார். அதில் அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.