×

ஏற்காடு வர சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

 

கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் ஏற்காடு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.


சேலம் கோடைவாசஸ்தலமான ஏற்காட்டில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு பேருந்து நிலையம், ரவுண்டானா பகுதி ,  படகு இல்லம்   உள்ளிட்ட பகுதிகளில்  சாரல் மழை பெய்தது.  இதனால் வாகனங்கள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்வதாலும், மேக மூட்டம் உள்ளதாலும் இன்று ஏற்காடு படகு இல்லம் பகுதியில் பாதுகாப்பு கருதி படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேக மூட்டம் அகன்றால் மீண்டும் படகு சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளியை பண்டிகையை ஒட்டி கடந்த இரண்டு நாட்களாக ஏற்காட்டுக்கு குறைவான அளவே சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்காட்டில் சாரல் மழை பெய்வது போல அருகில் உள்ள நாகலூர், செம்மநத்தம், பட்டிப்பாடி, உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களிலும் சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் ஏற்காடு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 24ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வர வேண்டாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.