அமித்ஷா வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து
Aug 19, 2026, 15:10 IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் அருகே கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிலையில்,நீர்வளப்பகிர்வு, பொருளாதார வளர்ச்சி,முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இதனையடுத்து மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் நாளை (ஆகஸ்ட் 20) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.