×

குமரியில் சுற்றுலா படகு சேவை ரத்து

 

சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி குமரி திருவள்ளுவர் சிலை, கண்ணாடி கூண்டு பாலம் மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கான படகு சேவை ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு குமரி சுற்றுலா தலத்தில் கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகுகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தமழ்நாடு  பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைப்போல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள காளிகேசம் வன சுற்றுலா தலத்திற்கும் நாளை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து குமரி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.